Home இலங்கை குற்றம் கஜ்ஜாவைக் கொல்ல மித்தெனியவுக்கு போன இசாரா செவ்வந்தி! காட்டிக்கொடுத்த கெகல்பத்ரே பத்மே

கஜ்ஜாவைக் கொல்ல மித்தெனியவுக்கு போன இசாரா செவ்வந்தி! காட்டிக்கொடுத்த கெகல்பத்ரே பத்மே

0

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையிலே, இசாரா செவ்வந்தியை கெகல்பத்ரே பத்மே காட்டிக்கொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இசாரா செவ்வந்திக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இசாரா செவ்வந்தியை யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, செவ்வந்திக்காக  கெகல்பத்ரே பத்மேவினால் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செவ்வந்தியினுடைய வரவு நாட்டிற்கு பல விடயங்களை வெளிப்படுத்தப்போகின்றது என்ற பதற்றத்தில் இன்னும் பல குற்ற முகங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி

NO COMMENTS

Exit mobile version