Home இலங்கை குற்றம் செவ்வந்தி தொடர்பில் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்

செவ்வந்தி தொடர்பில் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்

0

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பல அரசியல்வாதிகளுக்கும் செவ்வந்திக்கும் தொடர்பு உள்ளமை விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை

அத்துடன் பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை, போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை அச்சுறுத்தும் பாதாள உலகக்குழுவினருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில தரப்பினருக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதன்காரணமாக பொலிஸாருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர்களை முன்வைக்கின்றனர்.

தலைமறைவாகி உள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாட்டுக்கு இழுத்து வருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version