Home இலங்கை சமூகம் மாணவர்களின் அசமந்த போக்கால் ஏற்படும் ஆபத்து! வைத்திய நிபுணர் கூறும் விளக்கம்

மாணவர்களின் அசமந்த போக்கால் ஏற்படும் ஆபத்து! வைத்திய நிபுணர் கூறும் விளக்கம்

0

சிறுவர்கள் தவறான செயலுக்கு உட்படுத்தப்படுவது அதிகரிப்பதற்கான பிரதான காரணம், அன்பு மற்றும் பாலியல் தொடர்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை சரியாக புரிந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள் காட்டும் அசமந்த போக்கே என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அன்பு மற்றும் பாலியல்

காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”சமூகத்தில் பெண் பிள்ளைகள் தவறான செயல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என வெளிப்படையாக அறிந்தாலும் அதற்கு சமனாக ஆண் பிள்ளைகளும் தவறான செயல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

  

அன்பு மற்றும் பாலியல் ரீதியான உறவு என்பவற்றின் வேறுபாடுகளை அறியாத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

மோசமான விளைவு

இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகின்றது. அவர்கள் சில நேரங்களில் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

இதன்காரணமாக அவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட பல மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான நிலைமைகளை இல்லாதொழிப்பதற்கு பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வியை மேம்படுத்துவது அவசியம்.”என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version