Home இலங்கை அரசியல் இராணுவ அராஜகத்துக்கு முடிவு கட்டுவது அவசியம்: பிரித்தானிய தூதுவரிடம் வலியுறுத்திய சாணக்கியன்

இராணுவ அராஜகத்துக்கு முடிவு கட்டுவது அவசியம்: பிரித்தானிய தூதுவரிடம் வலியுறுத்திய சாணக்கியன்

0

தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ அராஜகத்துக்கு முடிவு கட்ட சர்வதேசத்தின்
கடும் அழுத்தம் அவசியம் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரைக் கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ
இல்லத்தில் வைத்து நேற்று(19) சந்தித்த போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் மேலும் கூறுகையில்,

“பிரித்தானியத் தூதுவருடனான சந்திப்பின்போது வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அரசின் வேலைத்திட்டங்கள்

அதில் முக்கியமாக மாகாண
சபைத் தேர்தல் தொடர்பிலும் அரசியல் கைதிகள், செம்மணி, காணிப் பிரச்சினைகள்,
இராணுவத் தலையீடு குறித்தும், அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து
முடிந்த கடையடைப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதனுடன் அரசின் வடக்கு –
கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version