Home இலங்கை குற்றம் யாழில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – இளம் தாயை காப்பாற்ற போராடிய முதியவர்கள்

யாழில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – இளம் தாயை காப்பாற்ற போராடிய முதியவர்கள்

0

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன், பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

மண்டைதீவு பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், இளம் தாய் மற்றும் பிள்ளை இருந்த நிலையில் மோசமான செயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அயலிலுள்ள முதியவர்கள் இளம் பெண்ணை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மர்மகும்பல்

கணவன் தொழிலுக்கு சென்றமை அறிந்து கொண்டு கும்பல் வீட்டுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் வீட்டுக்குள் பெரும் வன்முறை சம்பவங்களை மேற்கொண்ட நிலையில் மர்மகும்பல் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது சிலர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

வீட்டில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version