Home சினிமா ஆபாசமாக AI மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படங்கள்… கொந்தளிக்கும் நாயகிகள், வெளியிட்ட பதிவு

ஆபாசமாக AI மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படங்கள்… கொந்தளிக்கும் நாயகிகள், வெளியிட்ட பதிவு

0

AI வீடியோ

AI தொழில்நுட்பம், நல்ல முறையில் பயன்படுத்தினால் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் உள்ளது.

ஆனால் நல்ல விஷயங்களுக்கு பதிலாக கெட்ட விஷயங்களுக்கு அதிகம் பயன்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் முறையில் ராஷ்மிகா மந்தனா வீடியோ வெளியாக பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவிற்கு திருமணம் முடிந்ததா, யாருடன்… நடிகையின் பதில்

ராஷ்மிகாவுடன் இந்த பிரச்சனை முடியவில்லை, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீலீலா, சமந்தா, தமன்னா என தொடர்ந்து நடிகைகளின் புகைப்படங்கள் மோசமாக எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது.

நடிகைகள்

இந்த நிலையில் இளம் நடிகை ஸ்ரீலீலா, ஏஐ தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாமல் கெட்ட விஷயத்துக்கு சர்வ சாதாரணமாக பயன்படுத்திகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒருத்தரின் பேத்தியாகவோ, மகளாகவோ, அக்கா, தங்கையாகவோ, தோழியாகவோ இருப்பார்கள், ஏன் இப்படி பண்றீங்க என பதிவு செய்துள்ளார்.

அதேபோல் நடிகை நிவேதா தாமஸ் சேலையை கழட்டி நிற்பது போன்ற ஏஐ வீடியோக்களையும் நெட்டிசன்கள் உருவாக்கி அதிகம் பரப்பி வரும் நிலையில், உடனடியாக அதை எல்லாம் நீக்கவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version