பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற அரிசி கையிருப்பு தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (Public Health Inspectors Union SriLanka) தகவல் வெளியிட்டுள்ளது.
வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியே இவ்வாறு பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை
தற்காலிகமாக இடைநிறுத்தம்
பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த களஞ்சியசாலையில் இருந்த அரிசி பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் ( World Food Programme) மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு
இலங்கையை உலுக்கிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரின் விபரம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |