Home உலகம் இஸ்ரேல் தொடருந்து நிலையத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிசூடு : பலர் பலி

இஸ்ரேல் தொடருந்து நிலையத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிசூடு : பலர் பலி

0

இஸ்ரேலின் வர்த்தகத் தலைநகரான டெல் அவிவில் உள்ள தொடருந்து நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரண்டு  துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் பலர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதற்கு சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்தியவர்கள் இறங்கி துப்பாக்கிச் சூடு 

லைட் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதை காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

பலர் ஆபத்தான நிலையில்

காவல்துறையின் தகவலின்படி,குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தாக்குதல்காரர்கள் “நடுநிலைப்படுத்தப்பட்டதாக” காவல்துறையினர் தெரிவித்ததுடன் இந்த சம்பவத்தை”பயங்கரவாதம்” என்று விவரித்தனர். 

Source: https://ibctamil.com/article/shooting-attack-in-tel-aviv-1727810694

NO COMMENTS

Exit mobile version