சிலாபம் – விலத்தவ பகுதியில் இன்றையதினம்(16) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
