Home இலங்கை குற்றம் கொழும்பு மாளிகாகந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு மாளிகாகந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

0

மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று(14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது, காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/shooting-in-the-maligakanda-area-of-colombo-1734175199

NO COMMENTS

Exit mobile version