திருகோணமலையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காவல் பிரிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் காவல் பிரிவுக்கு உட்பட்ட ஐந்தாம் கட்டை பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சீன துறைமுக நகர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
