Home இலங்கை குற்றம் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்: 2025இன் 10 நாட்களில் மூவர் பலி

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்: 2025இன் 10 நாட்களில் மூவர் பலி

0

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான துப்பாக்கிச் சூடுகளில் 13 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து செயற்படும் கடத்தல்காரர்களின் ஈடுபாடே, இதில் பெரும்பாலான கொலைகளுக்கான காரணங்கள் என்ற கண்டறியப்பட்டுள்ளன.  

கொலைகளுக்கான காரணங்கள்

தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான வன்முறை அதிகரித்திருந்தது.

அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 13 தனித்தனி துப்பாக்கிச் சூடுகளில் 10 இறப்புகள் மற்றும் நான்கு காயங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை 2025 ஜனவரி ஆரம்பத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அம்பலாங்கொடை, கல்கிஸ்ஸ, திக்வெல்ல, பதவிய, கம்பஹா, கந்தான, மீகொட, மருதானை, மீட்டியாகொட, ஜா-எல, காலி, சீதுவ, வெலிகம மற்றும் அ{ஹங்கல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.  

NO COMMENTS

Exit mobile version