Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்: நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்: நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் (16) இன்று ஏற்பட்ட தீ
விபத்தில் தீக்கிரையான வர்த்தக நிலையங்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பகுதியில் உள்ள உணவகமொன்றில்
திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், குறித்த உணவகமும், உணவகத்தின் அருகே இருந்த
வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

அத்துடன், அருகே இருந்த மேலும்
சில வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

உரிய நடவடிக்கை

இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதில்
கவனஞ் செலுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடன்
கலந்துரையாடியதுடன், நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்று இல்லாமையினாலேயே
கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது
சுட்டிக்காட்டினார்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக
தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version