Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம் : விஷேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம் : விஷேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்

0

முல்லைத்தீவு-  மாஞ்சோலையில் இரு கடைகள் தீயில் எரிந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு- கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை வைத்தியாசாலை
முன்பாக உள்ள MVM உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் உணவகம் மற்றும் அருகில் உள்ள
பாட்டா கடை நேற்று(16)  காலை 7.30 மணியளவில் முற்றாக
எரிந்துள்ளது.

சோதனை நடவடிக்கை

இதனையடுத்து அருகே இருந்த கடைகளிலுள்ள பொருட்கள் துரித கதியில்
அகற்றப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,  தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில்
தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version