Home இலங்கை சமூகம் இலங்கையில் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதில் சிக்கல்

இலங்கையில் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதில் சிக்கல்

0

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதற்கான மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அண்மைக்காலமாக சிக்குன்குண்யா நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது.

இந்நிலையில், சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதற்கு ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒருவாரம் கழித்து மருத்துவ பரிசோதனையொன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உரிய சிகிச்சை

எனினும், அதற்கான மருத்துவ உபகரணங்கள் தற்போது பெரும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில், நோயைக் கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சைகளை அளிப்பதில் மருத்துவர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version