கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலை ஒன்றில் ஐசோஃப்ளுரேன் (Isoflurane) மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மயக்க மருந்துகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதாக மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய (G.Wijesuriya )தெரிவித்துள்ளார்.
மயக்க மருந்து விநியோகம்
மேலும், மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனை இன்று (15) விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.