Home இலங்கை சமூகம் நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்துள்ள லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்துள்ள லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு

0

நாட்டின் சில பகுதிகளில் சுமார் ஒரு வாரமாக லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எரிவாயு பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போக்குவரத்து பிரச்சினை

இந்த நிலை குறித்து லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், ​​போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும், தற்போது போக்குவரத்து பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தா நேற்று முதல் உரிய முறையில் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாகவும், அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version