Home இலங்கை அரசியல் இலங்கை – இந்திய உறவு : சிறீதரன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கை – இந்திய உறவு : சிறீதரன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

வெளிப்படையில் அன்னியோன்னியமாக தெரிந்தாலும் இலங்கை – இந்திய உறவு சந்தேகக்
கோடுகளோடுதான் பயணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை வருகை குறித்து நெடுந்தீவில்
வைத்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மொத்த இலங்கையையும் தன்னுடைய
செயல்திறனுக்குள் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.

ஈழத்தமிழர்கள்

ஆனால் ஈழத்தமிழர்கள்
கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

இலங்கைக்கு இந்தியா மீதான பற்றும் நம்பிக்கையும் சீனா மீது கொண்டிருக்கிற
பற்றும் நம்பிக்கையையும் விட குறைவானதே.

இந்தியா மீதான அச்சம் காரணமாகவே இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்களைத்
தாக்குவதற்கு காரணமாக உள்ளது.

இராணுவ முகாம்கள்

இந்தியாவில் இருந்து கள்ளத்தோணி மூலமாக
இலங்கைக்குள் வருகிறார்கள் என்கின்ற காரணத்தினாலேயே வட பகுதிகளில் இராணுவ காவல்
முகாம்களை அமைத்தார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மூலமாக இலங்கை அரசாங்கத்தோடு அவர்
பேசிக்கொள்கின்றார் எனும் விவகாரம் வெளிப்படையில் அன்னியோன்னியமாக
இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், இரு தரப்பு உறவு நிலை சில சந்தேக
கோடுகளோடுதான் இந்த பயணங்கள் நடைபெறுகின்றன“ என தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version