Home இலங்கை இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

0

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனின் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ (Julius Maada Bio) இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் செய்யவுள்ளார்.

இந்தநிலையில், இன்று (20) பிற்பகல் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலியஸ் மடா பயோ, சமோவாவில் (Samoa) நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தனிப்பட்ட விஜயம்

இந்தநிலையில், தனிப்பட்ட விஜயமாக இலங்கை வரும் அவர் நாளை (21) சமோவா செல்லவுள்ளார்.

அத்தோடு, அவர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herat) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த ஆண்டுக்கான பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நாளை (21) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/sierra-leone-president-visits-sri-lanka-1729410995

NO COMMENTS

Exit mobile version