Home இலங்கை சமூகம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி!

0

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்ட ஊர்தி பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாயக மண் மயான பூமியா தமிழின அழிப்புக்கு நீதி கோரிய நீதிக்கான ஓலம் என்ற
வாகனபவனி செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆரம்பமாகி நான்கு நாட்கள் கடந்த
நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு, புதுக் குடியிருப்பு, முள்ளியவளை ஒட்டிசுட்டான் ஆகிய பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து
சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து போராட்டம்

இந்த கையெழுத்து போராட்டமானது ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில்
சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய இந்த கையெழுத்து போராட்ட வாகனப் பவனி தாயகத்தின் பல்வேறுபட்ட பகுதிகளுக்கு சென்று கையெழுத்து
சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.

NO COMMENTS

Exit mobile version