Home இலங்கை சமூகம் இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையில் (Srilanka) அண்மைக்காலமாக வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்ச்சிகரமான தகவலை குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து தற்போதைக்கு 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

வருடாந்த பிறப்பு வீதம்

ஆட்டிசம் மட்டுமின்றி புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

  

இதேவேளை, உலக மக்கள் தொகை நாளை 2025 புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) 8.09 பில்லியனாக (809 கோடியாக) இருக்கும் என நேற்று (30) அமெரிக்க (USA) மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை வெளியிட்டுள்ளது.

மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.  

NO COMMENTS

Exit mobile version