சிலம்பரசன்
சிம்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் வாழும் ஒரு சிறந்த நடிகர்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனம் உடைந்து போகாமல் தன்னம்பிக்கையோடு சினிமாவில் பயணிப்பவர். சிம்பு நடிப்பில் தயாராகவுள்ள படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வெற்றிமாறனுடன் அவர் இணையும் படம் தான்.
மாஸாக வந்த பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அப்டேட்… மாஸ் வெற்றி கன்பார்ம்
அரசன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது, சமீபத்தில் கோவில்பட்டியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
அட்வைஸ்
ரசிகர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிம்பு எப்போதும் தனது ரசிகர்களுக்காக சில விஷயங்களும் கூறுவார்.
அப்படி சமீபத்தில், எவன் சொல்றதையும் கேட்டுட்டு ஆட்டு மந்த மாதிரி பின்னாடி போகவே போகாதீங்க, நீங்க யாரையும் பாலோ செய்யனும் என்ற அவசியம் இல்லை. சிலம்பரசன் படத்த பாத்தீங்களா விசில் அடிச்சீங்களா, ரசிச்சீங்களா சந்தோஷமா இருங்க, அதோட நிறுத்திடுங்க.
உங்க பேச்ச முதல்ல நீங்க கேளுங்க, அததான் நான் உங்களுக்கு சொல்வேன் என கூறியுள்ளார்.
