வேட்டுவம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
இப்போது அவர் அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஆர்யா உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்துவந்த நிலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவருக்கு திடீரென மாரடைப்பு வந்ததால் தான் இந்த இழப்பு என கூறினாலும் படப்பிடிப்பு தளத்தில் முறையான பாதுகாப்பு எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதுதான் கடைசி, தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ.. இதோ
சிம்பு
ஸ்டன்ட் கலைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் அக்ஷன் குமார் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் வேட்டுவம் படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
