Home இலங்கை சமூகம் உயிருக்கு போராடும் கடற்றொழிலாளர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

உயிருக்கு போராடும் கடற்றொழிலாளர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

0

கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் கடற்றொழிலாளர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை (Sri Lanka Navy) தெரிவித்துள்ளது.

அந்த படகில் இருந்த 6 கடற்றொழிலார்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஏனைய இரண்டு கடற்றொழிலார்களும் சிங்கப்பூர் (Singapore) கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்டுள்ளனர்.

விஷம் கலந்த பானத்தினை அருந்தியவர்கள்

தற்போது டெவோன் 5 நெடுநாள் கடற்றொழில் படகு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு கப்பலில் இவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. 

தங்காலை (Tangalle) கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு விஷம் கலந்த பானத்தினை அருந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version