Home இலங்கை சமூகம் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 15ஆயிரம் பாடல்களை பாடிய தென்னிந்திய முன்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்

உடல் நலக்குறைவால், தமது 80வது வயதில் நேற்று இரவு அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கொச்சியில் கடந்த 1944 ஆம் ஆண்டு மார்ச் 3 ம் திகதி பிறந்த, ஜெயச்சந்திரனின் இயற்பெயர் பலியத் ஜெயச்சந்திரகுட்டன் என்பதாகும்.

முன்னணி பாடகர்

ஜெயச்சந்திரன் முதன் முதலாக கடந்த 1967 ஆம் ஆண்டில், அனுராக கானம் போலே என்ற பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இந்தநிலையில், 1980 மற்றும் 90களில் அவர் முன்னணி பாடகராக திகழ்ந்தார்.

1972 ஆம் ஆண்டில், ‘பணிதீராத்த வீடு’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை அவர் பெற்றார்

இளையராஜாவின் இசையில் அவர் பாடிய  ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனதில் அவரை முன்னணி பாடகராக நிலைநிறுத்தின.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் இவர் பாடிய ‘கத்தாழம் காட்டுவழி’ பாடல் மிகவும் பிரபலமானது. 

NO COMMENTS

Exit mobile version