Home சினிமா கூமாபட்டி தங்கபாண்டி எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதி! சிங்கிள் பசங்க ஷோ முடிந்து செல்லும்போது சம்பவம்

கூமாபட்டி தங்கபாண்டி எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதி! சிங்கிள் பசங்க ஷோ முடிந்து செல்லும்போது சம்பவம்

0

ஜீ தமிழின் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்துகொண்டு வருகிறார் கூமாப்பட்டி தங்கபாண்டி. அவர் நடிகை சாந்தினி உடன் செய்யும் விஷயங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகின்றன.

இந்நிலையில் கூமாபட்டி தங்கபாண்டி எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எழும்பு எப்படி உடைந்தது?

தங்கபாண்டி டிவி ஷோ ஷூட்டிங்கிற்காக சென்னை வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு பஸ்ஸில் சென்று இருக்கிறார். அவர் பேருந்தில் இருந்து இறங்கும்போது ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்ததால் கதவு அவர் மீது வேகமாக வந்து மோதி இருக்கிறது.

அதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார். இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் கூமாபட்டி தங்கபாண்டி ஓவர்நைட்டில் பிரபலம் ஆகி டிவி வரை சென்றுவிட்டதால் வயிற்றெரிச்சலில் யாராவது இப்படி செய்துவிட்டார்களா என கேட்டு வருகின்றனர். 

 

NO COMMENTS

Exit mobile version