Home முக்கியச் செய்திகள் பாலச்சந்திரனுக்காக குரல் எழுப்பிய சிங்கள சட்டத்தரணி : அச்சத்தில் அரசு

பாலச்சந்திரனுக்காக குரல் எழுப்பிய சிங்கள சட்டத்தரணி : அச்சத்தில் அரசு

0

கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட சர்வதேச நாடுகளில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான குரலானது சற்று மேலோங்கி காணப்பட்டது.

வழமையாக காணப்படும் நினைவேந்தல்களை தாண்டி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களானது தமிழ் மக்களுக்கான பல ஆதரவு கரங்களை குவித்து இருந்தது.

இதில், சர்வதேச நாடுகளானது தமிழ் மக்களுக்கு தந்த ஆதரவை பார்த்து அச்சத்தில் இருக்கும் அரசுக்கு தென்னிலங்கையில் இருந்து தமிழ் தரப்புக்காக ஒலித்துள்ள மற்றுமொரு குரலாலும் மேலும் அச்சம் பாய்ந்துள்ளது.

அதாவது, தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தென்னிலங்கையின் சிங்கள இளம் சட்டத்தரணி ஒருவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு ?”என ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

இவ்வாறு, தென்னிலங்ககை தரப்பிலிருந்து தமிழ் மக்களுக்காக ஒரு குரல் ஒழிப்பது தற்போதைய அரசை பாரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அரசுக்கு ஏற்படகூடும் எதிர்வினைகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல், தற்போதைய நடைமுறை அரசியல் மற்றும் பலதரப்பட்ட அண்மைய அரசியல் நகர்வுகளை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி, 

  

https://www.youtube.com/embed/iZls2EvvEIY?start=76

NO COMMENTS

Exit mobile version