விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் அந்த சேனலில் முன்னணி தொடராக இருந்து வருகிறது. ரோகிணி பற்றிய உண்மை மீனாவுக்கு தெரியவந்த பிறகும் கதையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சென்றுகொண்டிருப்பது தொடர்ந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் என்ற ரோலில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
கைது வீடியோ
நடிகர் ஸ்ரீதேவா போலீசிடம் திமிராக பேசியதால் அவரை கைது செய்து ஜீப்பில் அழைத்து செல்கிறார்கள். அதை அருகில் இருப்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டது போல அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இதை பார்த்தாலே சீரியல் ஷூட்டிங் என அப்பட்டமாக தெரிகிறது என நடிகர் ஸ்ரீதேவாவா ட்ரோல் செய்து வருகின்றனர்.
