Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியல்: கண் பார்வையை இழந்துவிட்டாரா மனோஜ்.. அதிர்ச்சியில் குடும்பம்!

சிறகடிக்க ஆசை சீரியல்: கண் பார்வையை இழந்துவிட்டாரா மனோஜ்.. அதிர்ச்சியில் குடும்பம்!

0

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது கண்களில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

தன்னிடம் இருந்து ரூ. 30 லட்சத்தை ஏமாற்றியவனை பிடிக்க சென்றபோது மனோஜுக்கு இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருடைய கண்களில் அடிபட்டதால் ஆபரேஷன் செய்தனர். மேலும் அவருக்கு மீண்டும் கண் தெரியுமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் மொத்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

வரும் வாரம்

இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், ஆபரேஷன் முடிந்து அவருடைய கண் கட்டை மருத்துவர் அவிழ்க்க, தனது மனைவியை ரோகிணியை தான் முதலில் பார்க்க வேண்டும் என கூறுகிறார் மனோஜ்.

ஆனால், உள்ளே சென்ற ரோகினி, திடீரென வெளியே வந்த கதறி அழ துவங்கிவிட்டார். அப்படி உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதோ ப்ரோமோ வீடியோ..

NO COMMENTS

Exit mobile version