சிறகடிக்க ஆசை
ரோகிணிதான் க்ரிஷ் அம்மா என மீனாவுக்கு தெரியவந்தும் கூட, அவரால் அதை வீட்டில் உள்ள மற்றவர்களிடம் சொல்ல முடியவில்லை.
தன்னை பற்றிய உண்மையை வேறு யாரிடமாவது சொன்னால் நானும் என் மகனும் தற்கொலை செய்துகொள்வோம் என ரோகிணி கூறியதால் மீனா அமைதியாகவே இருக்கிறார். ஆனால், உண்மையை மறைக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சியால் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறார்.
உயிர் பிழைத்தாரா சக்தி? ஆதி குணசேகரன் கைது! எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
இந்த நிலையில் தன்னை பற்றிய உண்மை மற்றவர்களுக்கு தெரிய வருவதற்கு முன் மனோஜிடம் க்ரிஷ் நெருங்கி பழகி அவர்களுக்குள் நல்ல உறவு ஏற்பட வேண்டும் என ரோகிணி யோசிக்கிறார்.
இனி வருவது
இந்த சமயத்தில் கற்பனையில் சொன்ன அம்மாவை கற்பனையிலேயே இறந்துவிடலாம் என மீனா கோபத்தில் சொல்ல அதே ஐடியாவாக்கிவிட்டார்
ரோகிணி.
க்ரிஷ் அம்மா இறந்துவிட்டார், அதனால் க்ரிஷுக்கு போக இடமில்லை. மீனா மற்றும் முத்துவிடம்தான் க்ரிஷ் இருக்க ஆசைப்படுவதாக ரோகிணியின் அம்மா கூறுகிறார். க்ரிஷ் இங்கேயே இருக்கட்டும், அவன் நம் வீட்டு பிள்ளை என அண்ணாமலை கூற, ரோகிணி திட்டம் போட்டது போலவே அனைத்தும் நடக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
