Home சினிமா சிந்தாமணிக்கு செம ஷாக் கொடுத்த விஜயா, முத்து-மீனா மீது இவ்வளவு பாசமா… சிறகடிக்க ஆசை புரொமோ

சிந்தாமணிக்கு செம ஷாக் கொடுத்த விஜயா, முத்து-மீனா மீது இவ்வளவு பாசமா… சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசையில் அடுத்து என்ன கதைக்களம், என்ன டுவிஸ்ட் வரப்போகிறது என ஆவலாக ரசிகர்கள் பார்த்துக் கொண்டு வருகின்றனர்.

இப்போது வரை கதை சாதாரண எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் தாயத்து கதைக்களம் ஓடுகிறது, மனோஜ் Iron Boxல் சுட்டுக்கொள்ள அதைப்பார்த்து விஜயா, ரோஹினியை திட்டுகிறார்.

ஆனால் மனோஜ், அவளை ஏன் திட்டுகிறீர்கள் என தனது மனைவிக்காக விஜயாவை எதிர்த்து பேசுகிறார்.

புரொமோ

இன்றைய எபிசோட் விஜயா, மனோஜ் என்னை அறையை விட்டு வெளியே போ என சொல்லிவிட்டான் என்ற அழுகையோடு முடிந்துவிடுகிறது.

நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயாவை சிந்தாமணி சந்தித்து பணம் விஷயம் குறித்து பேசுகிறார், முத்துவை திட்டுகிறார்.

வெற்றிகரமாக ஓடும் ரெட்ரோ படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?

இதனை கேட்ட விஜயா, பூ கட்டுபவள் பணத்தை ஆளை வைத்து திருடுவீர்கள், புருஷன் மனைவி பணம் போச்சு என்றால் சும்மா இருப்பானா. அதற்காக அவள் கையை உடைக்கும் அளவிற்கு செய்வீர்களா, இந்த மாதிரி ரவுடித்தனம் எல்லாம் என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

போதும் இனிமேல் நீங்கள் டான்ஸ் கற்றுக்கொள்ள நீங்கள் இங்கே வர வேண்டாம் என கராராக கூறுகிறார்.

NO COMMENTS

Exit mobile version