சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, பலமுறை தமிழகத்தில் நம்பர் 11 சீரியலாக வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் டாப் 7ல் வர இப்போது டாப் 5ல் இடம்பெற்று வருகிறது. கடந்த வாரம் எல்லாம் 1 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது கதையில் முத்துவிற்கு நாளுக்கு நாள் ரோஹினி மீது சந்தேகம் வர வைக்கும் வகையில் நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது.
செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவா இது, உடல் மெலிந்து ஆளே மாறிவிட்டாரே… லேட்டஸ்ட் க்ளிக்
ஏற்கெனவே அவர் மலேசியா தானா என்ற சந்தேகம் இருக்க சிட்டியிடம் பணம் வாங்கியது, மொபைல் போன் திரும்ப கிடைத்தது என அடுத்தடுத்து அவர் மீதான சந்தேகம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
புதிய சாதனை
இப்படி பரபரப்பாக சீரியல் ஒளிபரப்பாகி வர தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது என்னடா கதையே இல்லாமல் சீரியல் ஒளிபரப்பாகிறது என்றில்லாமல் கதையுடன் தொடர் ஒளிபரப்பாகி இப்போது 600 எபிசோடுகளை கடந்து விட்டதாம். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
