சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவிற்கு, மனோஜ்-ரோஹினி ஜீவாவிடம் இருந்து பணம் வாங்கிவிட்டார்கள் என தெரிந்ததில் இருந்து செம கோபத்தில் உள்ளார்.
தனது மகனுக்கு எதுவும் தெரியாது என மனோஜை விட்டு ரோஹினியை மட்டும் வறுத்துஎடுக்கிறார்.
அவரைப் பார்த்தாலே விஜயா ஏதாவது கூறியபடி உள்ளார்.
தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைந்த முஃபாசா: தி லயன் கிங்.. வசூல் எவ்வளவு தெரியுமா
இன்றைய எபிசோட்
இன்று, ஸ்ருதியின் அம்மா ரோஹினிக்கு போன் செய்து விஷயத்தை கேட்க அவர் கோபப்பட்டு இது எங்கள் குடும்ப விஷயம் என கூறி போனை கட் செய்கிறார். அதே கோபத்தில் ஸ்ருதியிடம் வந்து ரோஹினி சண்டை போடுகிறார்.
வீட்டில் நடப்பதை ஏன் மற்றவர்களிடம் கூறுகிறீர்கள் என ரோஹினி மோசமான வார்த்தை கூறி கேட்க ஸ்ருதியும் அவருக்கு சமமாக சண்டையிடுகிறார்.
பின் விஜயா, ஸ்ருதி அம்மாவிடம் ஏன் மரியாதை இல்லாமல் பேசினாய் என அவர் ஒருபக்கம் ரோஹினியை திட்டுகிறார்.
இன்றைய எபிசோடில் மாறி மாறி திட்டுவாங்கிக் கொள்கிறார் ரோஹினி. அதோடு மனோஜ், அவரது அம்மா பேச்சை கேட்டு வீட்டிற்கு வராமல் இருப்பதை தெரிந்துகொண்டு அதற்கும் செம கோபப்படுகிறார்.