Home சினிமா குழந்தை பற்றி பேசி ரோஹினியின் கோபத்திற்கு ஆளாகும் மனோஜ்…என்னப்பா இது, சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

குழந்தை பற்றி பேசி ரோஹினியின் கோபத்திற்கு ஆளாகும் மனோஜ்…என்னப்பா இது, சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்தி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து-மீனா என்ற ஜோடியை ஹைலைட்டாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் சத்யா பிறந்தநாளுக்கு மீனா சென்றதால் முத்து கடும் கோபத்தில் உள்ளார்.

இதுதான் வாய்ப்பு என்று விஜயா மீனாவை ஏதாவது கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் முத்து-மீனா சண்டை எப்போது, எப்படி முடியும் என தெரியவில்லை.

புரொமோ

இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் மனோஜ், ரோஹினியிடம் கனவில் குழந்தைகளாக வருகிறது என்று சொன்னியே அதற்காகவே நிறைய விஷயங்கள் நடக்கிறது.

எனது நண்பர் ஒரு ஜோசியரை கூறினான், குழந்தைக்காக என கூற உடனே ரோஹினி குழந்தை பிறக்க மருத்துவரிடம் தான் போக வேண்டும், ஜோசியரிடம் இல்லை என கோபமாக கூறுகிறார்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் பிரியங்காவிற்கு அடித்த ஜாக்பாட்… என்ன விசேஷம் பாருங்க

NO COMMENTS

Exit mobile version