Home இலங்கை சமூகம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறிதரன் எம்.பி

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறிதரன் எம்.பி

0

திருகோணமலையில், சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று (25) காலை விஜயம் செய்து உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக ஆத்மா சாந்தி வேண்டி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏற்பாட்டாளர்களோடு கலந்துரையாடல்

இதன்போது மாவீரர்களின் குடும்பங்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் சென்று மாவீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார்,

அத்தோடு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version