Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை உயிரியல் பிரிவில் சாதித்த மூன்று சகோதரர்கள்

உயர்தர பரீட்சை உயிரியல் பிரிவில் சாதித்த மூன்று சகோதரர்கள்

0

வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் சிறப்பிடம் பெற்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களும் அவர்களது சகோதரியும் சாதனை படைத்துள்ளனர்.

பதுளை மத்திய கல்லூரியின் மாணவர்களான இரட்டை சகோதரர்களான அஞ்சு ராமநாயக்க (19), அகில ராமநாயக்க (19) மற்றும் அவர்களது சகோதரி சதாலி ராமநாயக்க (21) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளதாக பதுளை மத்திய கல்லூரி முதல்வர் எல்.ஜி.எஸ். சமரக்கோன் கூறினார்.

மாணவர்களின் பெற்றோர் மருத்துவர்கள்

இந்த மாணவர்களின் தந்தை சமந்த ராமநாயக்கவும், தாயார் சந்திமா ஜெயசிங்கவும் பதுளை போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதுளையின் பிரபல மருத்துவர் சமந்த ராமநாயக்க, அப்பாவி நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் ஒரு சிறந்த சமூக சேவையைச் செய்து வருகிறார்.   

NO COMMENTS

Exit mobile version