Home முக்கியச் செய்திகள் காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்!

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாக வடக்கின் இன்றைய நிலவரம்!

0

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும்,ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கு காரணமாக வும் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும்
ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்
ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில்
அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான
கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்
நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர். 

செய்தி – நயன் 

வடமராட்சி கிழக்கு 

வடமராட்சி கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் கால்நடைகள்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ். வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து
இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச
சபை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி – கஜி

கட்டைக்காட்டு பகுதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடர் மழை
பெய்துவருவதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

குறித்த பகுதியில் கடும் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்துவருவதால்
வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்பகுதி கிராம அலுவலர் பார்வையிட்டு வருகின்றார் .

செய்தி – எரிமலை

மருதங்கேணி 

சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர்
பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர்
உயிரழந்துள்ளார்.

நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில்
காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

செய்தி – கஜி

கொடுக்குளாய் 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால்
வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியில் பல இடங்களில் வெள்ள
நீர் தேங்கியுள்ளது.

கடற்றொழிலாளர்  தமது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். பலத்த காற்று
வீசியதால் நிழற்குடை ஒன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது.

செய்தி – எரிமலை

இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும்
வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள்
வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், கடற்றொழில்
மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து,
அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின்
பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர்
உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர
நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.

செய்தி – தீபன்

NO COMMENTS

Exit mobile version