Home சினிமா ஒன்று கூடிய தனுஷ், சிவகார்த்திகேயன்.. மாஸ் பாடலுக்கு நடனமாடிய வீடியோ

ஒன்று கூடிய தனுஷ், சிவகார்த்திகேயன்.. மாஸ் பாடலுக்கு நடனமாடிய வீடியோ

0

தனுஷ் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். தனுஷின் 3 படத்தில் நடித்து, பின் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் பங்கேற்றனர். அதை தொடர்ந்து தற்போது அதே திருமண விழாவில் பார்ட்டியிலும் இருவரும் பங்கேற்றுள்ளனர்.

நடனமாடிய வீடியோ

சிவகார்த்திகேயன், தனுஷ் மட்டுமின்றி ஹரிஷ் கல்யாண், இயக்குனர் அட்லீ, பிரியா அட்லீ என பலரும் இந்த பார்ட்டியில் ஒன்று கூடியுள்ளனர்.

அப்போது தனுஷின் வாட்ட கருவாடு பாடலுக்கு சிவகார்த்திகேயன், தனுஷ், அட்லீ ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-dhanush-atlee-party-dance-video-1732506295

NO COMMENTS

Exit mobile version