Home சினிமா கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா? என்ன ரோல் தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா? என்ன ரோல் தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

0

கோட் 

விஜய்யின் 68 படமான கோட் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, ஜெயராம் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’, ‘சின்ன சின்ன கண்கள்’ ‘தி ஸ்பார்க்’ பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், கோட் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகயுள்ளது. ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இன்ப அதிர்ச்சி!!

இந்நிலையில் கோட் படத்தில் தமிழ் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வெளியாகும் கோட் ட்ரைலரில் இதை எதிர்பார்க்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.   

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-join-in-goat-movie-1723890812

NO COMMENTS

Exit mobile version