மதராஸி படம்
மதராஸி, தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முன்னணி நடிகரின் படம். ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.
ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க வில்லனாக வித்யூத் ஜமால் நடித்திருந்தார்.
சிம்புவை தான் திருமணம் செய்வேன் என சொன்ன சாந்தினி! டிஆர் கண்ணீருடன் பதில்
குறிப்பாக வித்யூத் ஜமாலின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
மதராஸி திரைப்படம் மொத்தமாக ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதாம்.
பாக்ஸ் ஆபிஸ்
உலகளவில் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்துவரும் இப்படம் தமிழகத்தில் சூப்பர் கலெக்ஷன் செய்து வருகிறது.
படம் வெளியாகி 11 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே மதராஸி திரைப்படம் ரூ. 55.5 கோடி வரை வசூல் செய்து ஹிட் பட வரிசையில் இடம்பெற்றுள்ளது.
