மதராஸி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத், சபீர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
காந்தா
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளிவரும் அதே நாளில் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படமும் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் தயாராகியுள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் துல்கரின் காந்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவரவுள்ளது.
தெலுங்கு குக் வித் கோமாளி ஷோவில் தமிழ் சீரியல் பிரபலங்கள்… யாரெல்லாம் பாருங்க, புரொமோ இதோ
ஏற்கனவே கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
