Home இலங்கை சமூகம் யாழில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதி

0

யாழ். காரைநகர் – காசூரினா கடலில் நீராடிய அறுவர் விசப்பாசி தாக்கத்தினால்
பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

கசூரினா சுற்றுலா மையமானது காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுவதால்
இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியவேளை, “நேற்று (26) விசப்பாசி தாக்கிய ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருவதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.

திடீர் தாக்கம் 

இந்நிலையில், நான் காரைநகர் பொதுசுகாதார வைத்திய அதிகாரிக்கு இது குறித்து
தெரியப்படுத்தினேன். அந்தவகையில் விசப்பாசியினை ஒழிப்பதற்கு வினாகிரி வாங்கி
தருமாறு கோரிய நிலையில் நான் அதனை வாங்கி கொடுத்தேன்.

கடந்த நாட்களில் இவ்வாறான தாக்கம் எவையும் இடம்பெறவில்லை. திடீரென இன்றையதினமே
இந்த விசப்பாசி தாக்கம் இடம்பெற்றுள்ளது” என்றார்.

இந்நிலையில் இது குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்கு காரைநகர்
வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்ட
போதிலும் வைத்தியசாலை தரப்பினரை தொடர்புகொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may like this

NO COMMENTS

Exit mobile version