பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும்
நோக்கில் சுற்றிவளைப்பின் மூலம்
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(20.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்த
சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் இரண்டு உளவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் மணல் அகழ்வுக்கு
உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களும் மற்றும்
புளியம்பொக்கனை வண்ணத்தியாறு பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில்
ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 50 லிற்றர் கசிப்பினை பொலிஸார் பறிமுதல்
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ஆறு பேரும் பொலிஸ்
பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடையப் பொருட்கள் எதிர்வரும் 26ஆம் திகதி
கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
