எஸ்ஜே சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஒருபக்கம் இருக்க அவர் வில்லனாகவும் படங்களில் மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் நடிக்கும் படங்கள் பெரிய ஹிட்டும் ஆகி இருக்கின்றன. இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்.ஜே சூர்யா மீண்டும் படம் இயக்குகிறார்.
கில்லர்
கில்லர் என பெயரிடப்பட்டு இருக்கும் படத்தை தான் எஸ்ஜே சூர்யா இயக்கி நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷலாக சில போஸ்டர்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த கில்லர் பட போஸ்டர்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதோ.
