Home இலங்கை சமூகம் இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

இலங்கையின் பிரபல இசைக்கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்

0

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் (Arunthathy Sri Ranganathan) இன்று (17) அவுஸ்திரேலியாவில் (Australia) காலமானார்.

“கலாசூரி” “தேச நேத்ரு” ஆகிய விருதுகளைப் பெற்ற இவர் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் கடமையாற்றியிருந்தார்.

விரிவுரையாளராக பணியாற்றினார்

தமிழ், சிங்கள மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) பல ஆண்டுகளாக தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நடனம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக திகழ்ந்தவர்.

அந்த வகையில் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது.

அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பிலான தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this,

https://www.youtube.com/embed/RyAMXXDMTi0

NO COMMENTS

Exit mobile version