Home இலங்கை அரசியல் ரணிலில் கை வைத்த அநுர அரசு – கைதுகள் தொடரும் எனும் ஆனந்த விஜேபால

ரணிலில் கை வைத்த அநுர அரசு – கைதுகள் தொடரும் எனும் ஆனந்த விஜேபால

0

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று (22.08.2025) பதிவாகியது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இது குறித்து ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,

குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒரு போதும் தயங்க மாட்டோம்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல.

குற்றம் நிகழும்போது, ​​பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version