Home இலங்கை சமூகம் இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பிரதிநிதிகள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பிரதிநிதிகள் விடுத்துள்ள கோரிக்கை

0

பார்வைப் புலன் இழந்தவர்களுக்காக பணியாற்றும் ஏனைய அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையுள்ள கொள்கையோடு செயற்படுதல் நல்லது என  இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

பல்துறைகளில் கடமை

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் ஆதரவால் 95 பார்வையற்ற பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பார்வையற்ற பலர் சட்டத்தரணிகளாக, ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பல்துறைகளில் கடமையாற்றி வருகின்றனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version