Home உலகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு…! பிரித்தானிய பெண் தமிழ் எம்.பி உறுதி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு…! பிரித்தானிய பெண் தமிழ் எம்.பி உறுதி

0

இலங்கையை (srilanka) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா (United Kingdom) முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே உமா குமரன் (Uma Kumaran) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எமது பிரதமர் கியஸ்டாமர் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான கெத்ரின் மிஸ்க் போன்ற அனைவருமே தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு முன்னராக இருந்து இலங்கை தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புக்காவும் போராடிய வண்ணமே உள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

மேலும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court) அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என நாம் ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.

நடந்த அனைத்துக்கும் பொறுப்பானவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

இறுதிகட்ட போரின் போது, தமிழர்கள் இடத்தில் ஏற்பட்ட வலிகளும் துன்பங்களும் மேலும் பதிந்துள்ள நினைவுகளும் ஒருபோதும் எம்மைவிட்டு போய்விடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள்

இலங்கையில் அரசாங்கத்தின் செயற்பாட்டை நிறுத்துமாறு சத்தமாகவும் வெளிப்படையாகவும் குரல்கொடுத்தார். அவரது குரல் ஓங்கி ஒலித்ததாக இன்றும் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சொல்ல கேட்கின்றோம்.

ஆனால் காலம் கடந்து பின்நோக்கி பார்த்து ஏதாவது வேறு விதமாக செய்திருக்கலாம் அல்லது இன்னும் உறுதியாக ஏதாவது செய்திருக்கலாம் என யோசித்திருக்கலாம்.

ஆனால் நாம் இப்போது என்ன செய்ய போகின்றோம் என்பதை மட்டுமே பார்க்கவேண்டும். வலிகள் மிக்க 15 ஆண்டுகள் கடந்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

இலங்கை அரசாங்கமும் இதற்கு நீதி கிடைக்க விசாரணை நடத்துவதற்கான எந்தவொரு முதுற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version