Home இலங்கை சமூகம் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலை

ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலை

0

ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்த சனத்தொகையில் 10 முதல் 15 சதவீதமானவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களின் பெருமளவில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்பும் ரணில்

மருந்துகளால் கட்டுப்படுத்தல்

எனவே, ஆஸ்துமா நோயை உரிய முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும் என தெரிவித்தார்.

90 சதவீதமான ஆஸ்துமா நோயாளர்களை இலகுவாக மிகவும் குறைந்த செலவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர் வலியுறுத்தினார்.

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம் இன்று

உலக ஆஸ்துமா தினம்

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 பேர் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்துமாவால் உயிரிழக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

உலக ஆஸ்துமா தினம் மே 7 ஆம் திகதி வருகின்ற நிலையில் அன்று சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version