Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

0

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆராய்ந்து கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாதுறை தொடர்பான தற்போதைய நிலையினை கேட்டு
அறிந்து கொண்ட ஆளுநர், நெடுந்தீவில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு
மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

வடக்கு
மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலமாக வடக்கு மாகாண மக்கள்
அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்கு சாதகமான நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை

இது தொடர்பாக ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையை பிரதேசங்களின் தன்மையை
ஆராய்ந்து அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும் மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவாக்கம்
மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் மரநடுகை தொடர்பாகவும் முக்கியமான
விடயங்களை கலந்தரையாடியுள்ளார்.

இதனடிப்படையில், விரைவாகவும் வேகமாகவும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என பணிப்புரை
விடுத்துள்ளதுடன் உலக சுற்றுலா தினத்தை  கொண்டாடுவதற்கான
நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்துள்ளார். 

மேலும், குறித்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர், பணிப்பாளர் சுற்றுலாப் பணியகம், சுற்றுலாத்துறை பணியாக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம் போன்ற திணைகள உயர் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version